இந்தி மொழிக்கு எதிராக போராடியவருக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது : நீதிமன்றம்

மொழிக்கும் எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை சுட்டிக்காட்டி இந்தி மொழிக்கு எதிராக போராடியவருக்கு ஓய்வூதியம் வழங்க மறுத்துள்ளது.

திருப்பூரைச் சேர்ந்த எஸ்.சொக்கலிங்கம், கடந்த 1965இல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றுள்ளார். தனக்கு மொழிப்போர் தியாகிகளுக்கான ஓய்வூதியம் வழங்கக் கோரி தமிழ் வளர்ச்சித் துறையிடம் கடந்த 1987இல் அவர் அளித்த மனு நிராகரிக்கப்பட்டது.

இதை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி சுரேஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, எந்த ஒரு மொழிக்கும் எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியத்தை நிறுத்தி, கடந்த 2007இல் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதை ஏற்ற நீதிபதி, தமிழக அரசின் உத்தரவின்படி மனுதாரர் நிவாரணம் கோர முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

More News >>