சுவையான உருளைக்கிழங்கு சீஸ் கட்லெட் ரெசிபி

அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு சீஸ் கட்லெட் எப்படி செய்றதுன்னு பார்க்கப் போறோம்.

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - கால் கிலோ

துருவிய சீஸ் - அரை கப்

நறுக்கிய வெங்காயம் - கால் கப்

பச்சை வெங்காயம் - ஒரு ஸ்பூன்

மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்

காய்ந்த ரொட்டி தூள் - அரை கப்

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.

இதனுடன் துருவிய சீஸ், நறுக்கிய வெங்காயம், உப்பு, மிளகாய்த்தூள், மக்காச்சோள மாவு, பாதி ரொட்டி தூள் ஆகியவை சேர்த்து பிசையவும்.

பிறகு, அந்த கலவையை எலுமிச்சை பழ அளவில் உருண்டைகளாக உருட்டி வடை போல் தட்டவும்.

இதற்கிடையே சோளமாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கூழ் போல் கலக்கவும்.

பிறகு, தட்டிய உருளைக் கிழங்கு கட்லெட் ஒவ்வொன்றாக எடுத்து சோள மாவு கலவையில் முக்கி பின்னர் பிரட் தூளில் பிரட்டி சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

அவ்வளவுதாங்க சுவையான உருளைக்கிழங்கு சீஸ் கட்லெட் ரெடி..!

More News >>