யம்மி.. ஜாங்கிரி ஸ்வீட் ரெசிபி

ஹலோ ருச்சி கார்னர் இன்னைக்கு ஜாங்கிரி எப்படி செய்றது பார்க்கப் போகிறோம்..

தேவையான பொருட்கள்:

உளுந்து - ஒரு கப்

சர்க்கரை ஒரு - கப்

சிவப்பு கலர் - 2 சிட்டிகை

உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

முதலில் உளுந்தை சுமார் ஒரு மணி நேரம் ஊற வைத்து, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

பிறகு, வானொலியில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். அத்துடன் கலர் பொடியும் சேர்த்து கிளறவும்.

பின்னர், மெலிதான துணியில் சிறிய ஓட்டை போட்டு கோன் வடிவத்தில் தைத்து அதில் மாவை போடவும்.

வாணலியில், எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் அதில் மாவை ஜாங்கிரி வடிவில் பிழியவும்.

சுட்ட ஜாங்கிரி ஒவ்வொன்றையும் எடுத்து சர்க்கரை பாகில் ஊற வைக்கவும்.

அவ்ளோதாங்க சுவையான ஜாங்கிரி ஸ்வீட் ரெடி..!

More News >>