அதிர்ச்சி ரிப்போர்ட் - 1 சதவீத பணக்காரர்களிடம் தேசத்தின் 73 சதவீத செல்வம்

இந்தியாவில் உள்ள 73 சதவிகித செல்வம் ஒரு சதவிகித செல்வந்தர்களிடம் குவித்துள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் கடந்த 2017ம் ஆண்டு உலகளாவிய பொருளாதார வளர்ச்சி குறித்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஆக்ஸ்ஃபாம் என்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்வு முடிவை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

இதில் கடந்த ஆண்டு அடைந்த பொருளாதார வளர்ச்சியில் 73 சதவிகித செல்வம் ஒரு சதவிகித செல்வந்தர்களிடம் குவிந்துள்ளது. மேலும் 67 கோடி ஏழை மக்களின் வருவாய் 1 சதகிதம் மட்டுமே உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் 1 சதவிகித பணக்காரர்களின் பொருளாதாரம் 20.9 லட்சம் கோடி உயர்ந்துள்ளது. இது நடப்பு ஆண்டின் மத்திய பட்ஜெட்டுக்கு இணையான தொகை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் 10 சதவிகித மக்கள் 73 சதவிகித செல்வத்தை வைத்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

More News >>