என்ன சொல்ல வருகிறார் கிரண்பேடி? - மூன்று காக்கைகளைப் படம் பிடித்து மீண்டும் டிவீட்!

ஒரு காக்காயைப் படம் பிடித்து டிவிட் போட்டதற்கே வாங்கிக் கட்டிக் கொண்ட புதுவை ஆளுநர் கிரண்பேடி, இன்று ஒரு ஜோடி காக்கை மற்றும் தனியாக ஒரு காக்கை இருக்கும் படங்களை டிவீட் செய்து மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி 6 நாட்களாக தொடர் தர்ணாவில் ஈடுபட்டிருந்தார். ஆளுநர் கிரண்பேடியோ போராட்ட்டத்தைக் கண்டு கொள்ளாமல், நாராயணசாமியின் நிறத்தையும், தர்ணாவையும் கிண்டலடிப்பது போல் அண்டங்காக்கை ஒன்றின் படத்தை டிவிட்டரில் பதிவிட்டு யோகாவுடன் ஒப்பிட்டிருந்தார்.

நாராயணசாமியின் நிறத்தைக் கிண்டலடிப்பதா?? என்று கிரண்பேடிக்கு எதிராக கண்டனக்குரல் எழுந்தது. தற்போது நாராயணசாமியின் போராட்டம் முடிவுக்கு வந்த நிலையிலும் கிரண்பேடி காக்கை மேட்டரை விட மாட்டார் போலும். இன்று ஆளுநர் மாளிகை வளாகத்தில் ஜோடியாக இரு காக்கைகள் மின் விசிறியில் அமர்வ் திருப்பதையும், மற்றொரு காக்கை தன்னந்தனியாக தென்னை மரத்தில் இருப்பதையும் படம் பிடித்து 'என்ன ஒரு அமைதியான இயற்கைச் சூழல், இதெல்லாம் தவிர்க்க முடியாத ஒன்று ' என்று டிவீட் செய்துள்ளார். ஆக புதுச்சேரியில் அமைதி திரும்பி விட்டது என்கிறாரா? அல்லது கிரண்பேடி என்ன தான் சொல்ல வருகிறார் என்ற காக்கை சர்ச்சை மீண்டும் கிளம்பிள்ளது.

More News >>