ஜி.கே.வாசனின் பாசிட்டிவ் வாக்குகள்! கனிமொழி முயற்சிக்குத் தடை போட்ட காங்கிரஸ்

திமுக கூட்டணிக்குள் ஜி.கே.வாசனைக் கொண்டு வருவதற்குக் கடைசி நிமிடம் வரையில் கனிமொழி முயற்சி செய்திருக்கிறார். ஆனால் டெல்லி மேலிடம் கிரீன் சிக்னல் கொடுக்கவில்லை.

இதைப் பற்றி திமுக தலைவர் ஸ்டாலினிடம் பேசிய கனிமொழி, ராமதாஸ் வேண்டாம் என நாம் முடிவெடுத்ததில் அர்த்தம் இருக்கிறது. வடமாவட்டங்களில் மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுக்கவே எஸ்.சி மக்கள் மத்தியில் ராமதாஸ் மீது வெறுப்புணர்வு இருக்கிறது.

பிற்படுத்தப்பட்ட சமூகங்களும் ராமதாஸை எதிரியாகப் பார்க்கின்றன. அவர் தன்னுடைய சுயலாபத்துக்காக சொந்த சமூகத்தை அடகு வைக்கிறார். அவருக்கான நெகட்டிவ் வாக்குகள் அதிகம்.

அதனால் ராமதாஸை ஒதுக்கி வைத்தோம். ஆனால், ஜி.கே.வாசனுக்கு மாநிலம் முழுவதும் பாசிட்டிவ் வாக்குகள்தான் உள்ளன. அவர் நம்முடைய அணிக்குள் வருவது நமக்கும்தான் கூடுதல் பலம். வாசனைக் கைவிட்டுவிடக் கூடாது எனக் கூறியிருக்கிறார்.

ஆனால் காங்கிரஸ் கமிட்டியில் உள்ள வாசன் எதிர்ப்பாளர்களோ, ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் ஆட்சிகாலத்தில் அவருக்கு ராஜ்யசபா சீட்டையும் கொடுத்து கேபினட்டிலும் இடம் கொடுத்தார் சோனியா. பதவிக்காலம் முழுவதையும் அனுபவித்துவிட்டு இடர்ப்பாடு வந்த நேரத்தில் தமாகா கொடியைத் தூக்கிக் கொண்டார்.

அவரது நிலைப்பாடு பிடிக்காததால்தான் பீட்டர் அல்போன்ஸ் உட்பட முக்கியத் தலைவர்களே நம்பக்கம் வந்தனர். இப்போதும் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பதவிக்காக மட்டுமே நம்மிடம் வருவார். ஜிகேவாசன் இல்லாமல் இருப்பதே இந்தக் கூட்டணிக்கு நல்லது எனக் கூறி நிராகரித்துவிட்டார்கள். டெல்லியில் தன்னுடைய கை ஓங்க வேண்டும் என்பதற்காக, கனிமொழியும் சைலண்ட் மோடுக்குப் போய்விட்டாராம்.

அருள் திலீபன்

More News >>