`நான் எப்படியோ அப்படி தான் இருப்பேன் - ஹிட் அடிக்கும் பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் டீசர்!
நடிகர் பிரபுதேவாவின் ‘பொன் மாணிக்கவேல்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
நடிகர், இயக்குநர், டான்ஸ்மாஸ்டர் என பல அவதாரம் எடுத்து வந்த பிரபுதேவா தற்போது படம் இயக்குவதில் இருந்து சற்று விலகியுள்ளார். மீண்டும் நடிப்பின் பக்கம் திரும்பியுள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் சார்லி சாப்ளின் - 2. சார்லி சாப்ளின் 2 படத்தை தொடர்ந்து பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பொன் மாணிக்கவேல்’.
இந்தப் படத்தை ஏ.சி.முகில் என்பவர் இயக்க நேமிசந்த் ஜபக் என்பவர் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் முதல்முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் பிரபு தேவா. அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். இமான்இசையமைத்துள்ளார். முக்கிய கதபாத்திரங்களில் இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
படத்தின் அனைத்து பணிகளும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. பரபரப்பான காட்சிகள், போலீஸ் வேடத்தில் பிரபுதேவா போடும் சண்டைக்காட்சிகள், பின்னணி இசை என டீசர் வரவேற்பை பெற்று வருகிறது. பிரபுதேவா முதன்முதலில் போலீஸ் கேரக்டரில் நடிப்பதால் அவரது ரசிகர்கள் மத்தியில் படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.