கொல காண்டுல வரோம்... செண்டிமெண்ட் இருக்கறவன் குறுக்க வராதீங்க... சிஎஸ்கே ரசிகர்களை குஷிப்படுத்திய இம்ரான் தாஹீர்!
ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் சிஎஸ்கே ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் சென்னை அணி வீரர் இம்ரான் தாஹீர் டுவீட் செய்துள்ளார்.
12வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் 17 போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. முதல் 17 போட்டிகள் இரண்டு வார காலகட்டத்தில் மார்ச் 23 முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் 8 அணிகளும் தங்கள் சொந்த மைதானத்தில் விளையாட உள்ளன. முதல் போட்டி மார்ச் 23-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.
முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. மேலும் ஐபிஎல் ஓப்பனிங் விழா சென்னையில் நடைபெறுவது தமிழக ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ள நிலையில் அதனை இரட்டிப்பாக்கும் வகையில் முதல் போட்டியிலேயே பலம் கொண்ட கோலியின் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் சிஎஸ்கே எதிர்கொள்ளவுள்ளது.
இந்நிலையில் சென்னை நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டி குறித்தும் சிஎஸ்கே ரசிகர்கள் குறித்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் இம்ரான் தாஹீர் தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், ``என் இனிய தமிழ் மக்களே நலமா? களம் இறங்குகிறோம் மார்ச் 23 நமது கோட்டையில். வந்தோம் வென்றோம் சென்றோம், வருவோம் வெல்வோம் செல்வோம்.
இந்த வருஷம் எங்க காளியோட ஆட்டத்தைப் பார்ப்பீங்க. கொல காண்டுல வரோம், செண்டிமெண்ட் இருக்கறவன் குறுக்க வராதீங்க...எடுடா வண்டிய... போடுடா விசில" என்று ட்வீட் செய்துள்ளார். இவரின் பதிவு சிஎஸ்கே ரசிகர்களுக்கு மேலும் ஹைப் ஏற்றுவது போல் அமைந்துள்ளது.