தோழமையாக இருக்கும் கட்சிகளுடன் மட்டும் நாளை முதல் கூட்டணிப் பேச்சுவார்த்தை, தேமுதிகவுடன் பேச்சு இல்லை - மு.க.ஸ்டாலின் தகவல்!
மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து தோழமைக் கட்சிகளுடன் நாளை முதல் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், கூட்டணி தொடர்பாக தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை இல்லை என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் காங்கிரசுடனான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தான பின் மு.க.ஸ்டாலின் கூறுகையில், திமுக கூட்டணி நூறு சதவீதம் வெற்றிக் கூட்டணி . அதிமுக அமைத்துள்ள கூட்டணி மக்கள் நலக் கூட்டணி கிடையாது, பணநலக் கூட்டணி என்று மக்களே கூறுகின்றனர் என்றார்.
தேர்தல் கூட்டணி தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளாக திமுகவுடன் தோழமையாக இருந்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப் படும். தேமுதிகவுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.