மொறு மொறு ஆனியன் ரவா பக்கோடா ரெசிபி
சாயங்காலம் ஆனா ஏதாச்சும் மொறு மொறுன்னு சாப்பிடனும் போல இருக்கா.. அப்போ ஆனியன் ரவா பக்கோடா ரெசிபியை செஞ்சு சாப்பிடுங்க..
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சைமிளகாய் - 2
மைதா - ஒரு கப்
ரவை - அரை கப்
வறுத்த கடலை - ஒரு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வெங்காயம், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கடலையை கடாயில் வறுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர், ஒரு கிண்ணத்தில் வறுகடலை மாவு, மைதா, தேவையான அளவு உப்பு, தண்ணீர் ஆகியவை சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
அத்துடன், வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
பின்னர், ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் பக்கோடா மாவை சிறிய சிறிய அளவில் போட்டு பொரித்து எடுக்கவும்.
அவ்ளோதாங்க.. சுவையான ஈவ்னிங் ஸ்னாக்ஸ் ஆனியன் ரவா பக்கோடா ரெடி..!