கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 13 பேர் கைது
கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 13 பேரை எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் காலம் காலமாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இலங்கை கடற்படையோ எல்லை தாண்டியதாக மீனவர்களை கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது.
இதற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்கவும் இல்லை. இந்நிலையில் ராமநாதபுரம் மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 13 பேர் கச்சத்தீவு அருகே மீன்பிடி தொழிலில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டியதாக 13 பேரையும் கைது செய்தது. அவர்களது 3 மீன்பிடி படகுகளையும் சிறைபிடித்துள்ளது.
கைது செய்யப்பட்ட அனைவரும் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.