10 தொகுதி, 2 ராஜ்யசபா சீட்... பிடிகொடுக்காமல் அடம்பிடிக்கும் தேமுதிக- விழிபிதுங்கும் அதிமுக-பாஜக!

லோக்சபா தேர்தலில் 10 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் அல்லது 2 ராஜ்யசபா சீட்டுகள் தரப்பட வேண்டும் என்பதில் தேமுதிக பிடிவாதமாக இருப்பதால் அதிமுக- பாஜக கட்சிகள் விழிபிதுங்கி உள்ளன.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இடம்பெற்றுவிட்டது. இதையடுத்து தேமுதிகவை வளைக்கும் வேலைகளை அதிமுக, பாஜக மேற்கொண்டு வருகின்றன.

தேமுதிகவோ, பாமகவை விட பெரிய கட்சி நாங்கள்.. அவர்களுக்கு 7 தொகுதிகள் எனில் எங்களுக்கு குறைந்தபட்சம் 10 தொகுதிகள் வேண்டும்; அதேபோல் 2 ராஜ்யசபா சீட்டுக்கு உத்திரவாதம் தர வேண்டும் என அடம்பிடிக்கிறார்களாம்

ஆனால் தற்போதைய நிலையில் 10 தொகுதிகள் சாத்தியமே இல்லை; அதிகபட்சம் 3 தான் தர முடியும் என்கிறதாம் அதிமுக. தேமுதிகவின் பிடிவாதத்துக்கு பதிலளிக்க முடியாமல் பாஜக விழிபிதுங்கி கிடக்கிறதாம்.

இந்நிலையில் தொகுதி உடன்பாடு தொடர்பாக இன்று கட்சி நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். மேலும் அதிமுக தரப்பும் நேரடியாக விஜயகாந்துடன் ஆலோசனை நடத்துகிறது.

More News >>