லோக்சபா தேர்தல்: ஆதரவு கேட்டு தவ்ஹீத் ஜமாஅத் ஆபீசுக்கு போன அமமுக!
லோக்சபா தேர்தலில் பிரதான கட்சிகள் எதுவும் கண்டுகொள்ளாத நிலையில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பிடம் ஆதரவை கேட்டுள்ளது தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
திமுக, அதிமுக தலைமையில் மெகா கூட்டணிகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இந்த கூட்டணிகளில் தினகரனின் அமமுக தனித்துவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் லோக்சபா தேர்தலில் ஆதரவு கோரி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்திற்கு அமமுகவின் வெற்றிவேல் தலைமையிலான குழு சென்று பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ் எம் பாக்கர், துணை தலைவர் முஹம்மது முனீர், பொதுச் செயலாளர் முஹம்மது சித்திக், பொருளாளர் பிர்தெளஸ் உள்ளிட்டோருடன் அமமுக குழு பேச்சுவார்த்தையை நடத்தியது.