உ.பி.யில் சமாஜ்வாதி - பகுஜன் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு - மோடியின் வாரணாசியில் சமாஜ்வாதி போட்டி!
உத்தரப் பிரதேசத்தில் கூட்டணி அமைத்துள்ள சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளனர். பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் சமாஜ் வாதி கட்சி வேட்பாளரை நிறுத்துகிறது.
உ.பி.யில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் சமாஜ்வாதி 37 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 38 தொகுதிகளிலும், ராஷ்டிரிய லோக்தளம் கட்சி மூன்றிலும் போட்டி யிடுகின்றன. இதில் எந்தக் கட்சி எந்தத் தொகுதி என்ற பட்டியலை மாயாவதியும், அகிலேஷ் யாதவும் இன்று கூட்டாக வெளியிட்டனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அமேதி, சோனியாவின் ரேபரேலி தொகுதிகளில் இரு கட்சிகளுமே வேட்பாளரை நிறுத்துவதில்லை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளரை நிறுத்துகிறது.