சக்திவாய்ந்த பனிப்புயலில் சிக்கி 184 விபத்துகள்: மின்னசோட்டா மாகாணம் அறிவிப்பு (வீடியோ)
அமெரிக்கா: தொடர் பனிப்பொழிவுடன், பனிப்புயலும் அடித்ததால், இதில் சிக்கி சுமார் 184 விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக மின்னசோட்டா ரோந்து படையினர் அறிவித்துள்ளனர்.
அமெரிக்காவின், மின்னசோட்டா மாகாணத்தில் கடந்த சில நாட்களால் தொடர்ந்து பனிப்பொழிவு ஏற்பட்டு மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதற்கிடையே நேற்று திடீரென ஏற்பட்ட பனிப்புயலில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளது.
இதுதொடர்பாக மின்னசோட்டா மாகாணத்தின் ரோந்து படையினர் வெளியிட்ட அறிக்கையில், “ திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில்படி நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தற்போது (4.30 மணி) வரையில் சுமார் 184 விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இதில், ஏடன் பிரைரி பகுதியில் ஏற்பட்ட 13 விபத்துகளில் சிக்கியவர்கள் படுகாயமும், கடும் படுகாயமும் அடைந்தனர். பனிப்பொழிவில் சிக்கியிருந்த சுமார் 300 வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. பனியால் உயிரிழப்பு ஏதும் இதுவரை இல்லை” என குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், தென்மேற்கு மின்னாசோட்டா மாகாணத்தில் அதிகளவிலான பனி படர்ந்திருப்பதால் அங்கு பயணிக்க வேண்டாம் என மின்னசோட்டா மாகாண போக்குவரத்து துறை மக்களுக்கு அறிவித்துள்ளது.
பனிப்பொழிவு எதிரொலியாக, நேற்று ஆல்பர்ட் லியா, மங்கடோ, ரோசஸ்டர், வினானோ உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அதிகப்படியான பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
வர நாட்களில் பனிப்புயல் ஏற்பட வாய்ப்புள்ளதால் தென் மின்னசோட்டா பகுதியில் பனி அடர்த்தியின் அளவு மேலும் உயரும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின்படி, “தென்மின்னசோட்டா மாகாணத்தில் பனிப்புயல் தாக்கும்போது மங்கோடா அருகே உள்ள பர்மோன்ட் பகுதி மற்றும் ரெட் விங் இடையே 10 முதல் 14 அங்குலத்திற்கு பனிப்பொழிவு இருக்கும்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடர்ந்த பனியில் சிக்கிய காரை எடுக்க முடியாமல் அவதிப்படும் ஒருவரது நேரடி வீடியோ இதோ..