`டைட்டிலுக்கே இப்படியா? - `தும்பா புலியை மயக்கிய அனிருத்!
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான `கனா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் தர்ஷன். இவர் தற்போது அறிமுக இயக்குநர் ஹரிஷ் ராம் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். பேண்டஸி படமாக இந்தப் படம் தயாராகி வருகிறது. இதில் தர்ஷனுக்கு ஜோடியாக அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் நடிக்கிறார்.
இவரை தவிர கலக்கப்போவது யாரு தீனா நடிக்கிறார். இந்தப் படத்தில் வித்தியாச முயற்சியாக தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர்களான அனிருத், விவேக் - மெர்வின், சந்தோஷ் தயாநிதி ஆகிய மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் டைட்டில் இதுவரை அறிவிக்கப்படாமலே இருந்தது.
தற்போது இந்தப் படத்தின் டைட்டிலை மிகவும் வித்தியாசமான முறையில் வீடியோ மூலம் வெளியிட்டுள்ளனர். அதில் அனிருத் பியோனா வாசிக்க அந்த இசையை புலி ரசித்து கேட்பதுபோல காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. வீடியோ வெளியான சில மணி நேரங்களில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இணையத்தைக் கலக்கி வருகிறது.