எத்தனை முரண்பாடுகள் ... ஆனாலும் சமாளித்து விட்டேன்....புதுச்சேரி ஆளுநராக1000 நாள் சாதனை குறித்து கிரண்பேடி டிவீட்!
புதுச்சேரி ஆளுநராக கிரண் பேடி பதவியேற்று இன்றுடன் 1000 நாட்கள் முடிவடைகிறது. இது குறித்து டிவிட்டரில் இத்தனை நாட்களில் எத்தனை முரண்பாடுகள் என்று பதிவிட்டுள்ளார்.
ஆளுநராக பதவியேற்ற முதல் நாளில் மாளிகையில் நட்ட சின்னஞ்சிறு மரச்செடி 1000 நாட்களில் மரமாக வளர்ந்துள்ளதையும் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் கிரண்பேடி.அத்துடன் சூரிய உதயத்தின் பின்னணியில் தேசியக் கொடியுடன் , I000 நாட்களில் அத்துனை முரண்பாடுகளுக்கு எதிராகவும் சமாளித்து விட்டேன் என்று புதுச்சேரி அரசியல் நிலவரம் நாசூக்காக வெளிப் படுத்தியுள்ளார் கிரண்பேடி.