எந்தத் தண்ணீய சொல்றாங்க....?அதிமுகவை கிண்டலடித்த கமல்!

தமிழகத்தில் தண்ணீர் பிரச்னையை தீர்த்தது தாங்கள் தான் என்று அதிமுகவினர் கூறுகிறார்களே என்ற கேள்விக்கு எந்தத் தண்ணீய.. .. என்று மதுக்கடைகளைக் குறிப்பிட்டு கமல ஹாசன் கிண்டலடித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டி என்று கூறி மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமலஹாசன் தேர்தல் பணிகளிலும் சுறுசுறுப்பு காட்டி வருகிறார். அதிமுக, திமுக மீதும் கடும் விமர்சனம் செய்து வருகிறார்.

இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கமல் பேசுகையில், தனித்துப் போட்டியிடும் தங்கள் கட்சிக்கு ரஜினி ரசிகர்கள் ஆதரவளிப்பாளர்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அப்போது தமிழகத்தில் தண்ணீர் பிரச்னையை தீர்த்தது அதிமுக அரசு தான். அதனால் ரஜினி கூறிய தண்ணீர் பிரச்னை கருத்துப்படி அவரது ரசிகர்கள் எங்களைத்தான் ஆதரிப்பார்கள் என்று அதிமுகவினர் கூறுகின்றனரே? என்று கேட்டதற்கு எந்தத் தண்ணீய சொல்றாங்க.. என்று கேலிச் சிரிப்புடன் டாஸ்மாக்கை ஞாபகப்படுத்தி அவருக்கே உரித்தான பாணியில் பதிலளித்தார்.

More News >>