சரமாரி குற்றச்சாட்டுகளுக்கு சவுக்கடி பதில்களுடன் களமிறங்கிய பாமக
பாமகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு முதன் முதலாக பாமக தரப்பிலிருந்து கீழ்க்கண்ட செய்தி பரப்பப்பட்டு வருகிறது.
- அம்பேத்கருக்கு சிலை வச்சோம், தலித்களை அமைச்சராக்கினோம், சமூக நல்லிணக்கத்துக்காக திருமாவுடன் கூட்டணி அமைத்தோம். - தலித்கள் எல்லாம் பாமகவை ஆதரித்து ஓட்டு போட்டிங்களா?
- இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் கட்டி தந்தோம், ஜான் பாண்டியன், பசுபதி பாண்டியனுக்கு அரசியல் முகவரி தந்தோம், பள்ளர்களுக்காக ஒற்றுமை மாநாடு போட்டோம்.- பள்ளர்கள் யாராவது பாமகவை ஆதரித்து ஓட்டு போட்டிங்களா?
- பாடநூலில் காமராசர் வாழ்த்து பாடல் வைக்க கோரினோம், சி.ப.ஆதித்தனார் பெயரில் சாலைக்கு பெயர் வைக்க கோரினோம், சிபிஎஸ்சி பாட புத்தகத்தில் நாடார்கள் பற்றி தவறாக எழுதப்பட்டிருந்த பகுதியை நீக்க சட்ட நடவடிக்கை எடுத்தோம்.- நாடார் யாராவது பாமகவை ஆதரித்து ஓட்டு போட்டிங்களா?
- 108 சாதிகளுக்கும் இட ஒதுக்கீடு சலுகை வாங்கி தந்தார் ராமதாஸ், எல்லா சாதிகாரனுக்கும் கட்சியில் பதவி தந்தார்.- எத்தனை சாதிகாரன் சாதி கடந்து பாமகவை ஆதரித்து ஓட்டு போட்டான்?
- ஈழத்துக்காக தொடர்ந்து குரல் கொடுத்தார், தொன்னூறுகளிலேயே வாழ்வுரிமை மாநாடு போட்டார், தமிழினத்தின் தலைவன் பிரபாகரன் மட்டுமே என பிரகடனம் செய்தார்.- எத்தனை தமிழ் உணர்வாளர்கள் பாமகவை ஆதரித்து ஓட்டு போட்டார்கள்?
- முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டுக்காக முதலில் குரல் கொடுத்தார், பழனி பாபாவுக்கு அரசியல் தஞ்சம் கொடுத்தார்.- எத்தனை முஸ்லிம்கள் பாமகவை ஆதரித்து ஓட்டு போட்டார்கள்?
- திராவிடத்தை தவிர்த்தும், தனித்து நின்றும் தேர்தலை கொள்கை கோட்பாடுகளோடு சந்தித்தோம்.- எந்த நேர்மையாளன், ஒழுக்கசீலன் பாமகவை ஆதரித்து ஓட்டு போட்டான்?
எவனும் ஓட்டு போடல, நடுநிலையோடு ஆதரிக்கல, நன்றியோடு நினைத்து பார்க்கல நாம செய்தது எல்லாம் வீண் தானோ? இந்த நன்றி கெட்ட சமுகத்துக்காக ஏன் போராடி நம்மை நாமே அழித்துக் கொள்ள வேண்டுமென நினைத்து அரசியல் கூட்டு வைத்தார்கள்.
ஓட்டு போட மனம் வராத அத்தனை பேரும், பாமகவை குறை சொல்ல மட்டும் ஓரணியில் திரண்டு வந்து நிக்கிறானுங்க.நெஞ்சில கைய வச்சி சொல்லுங்க? உங்களால பாமக அடைந்த பலன் என்னவென்று? பிறகு ஏன் பாமக இப்படி தான் இருக்கனும்னு நீங்க எதிர் பாக்குறிங்க?
பாமக எதிர்பார்த்தது போலவா நீங்க இருந்திங்க? பாமக கூட்டணி வைக்க காரணமே நீங்க தான். நீங்க மட்டுமே தான். அதனால உங்க தவறை மறந்து பாமகவை விமர்சனம் செய்யாதீங்க.
இவ்வாறு பாமக தரப்பு பதிலடி கொடுத்து வருகிறது
-எழில் பிரதீபன்