லோக்சபா தேர்தலில் 38 இடங்களில் அமமுக போட்டி: தினகரன்
லோக்சபா தேர்தலில் 38 இடங்களில் அமமுக போட்டியிடும் என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், 38 தொகுதிகளில் அமமுக போட்டியிட முடிவு செய்துள்ளது என்றார்.
முன்னதாக காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகளை இணைத்து மெகா கூட்டணி அமைக்க தினகரன் முயற்சித்தார். ஆனால் அது நடைபெறவில்லை.
இதையடுத்து திருநாவுக்கரசர் உதவியுடன் தேமுதிகவை வளைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் அமமுக தனித்தே போட்டியிடும் என தினகரன் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.