முட்டை கொத்து சப்பாத்தி

முட்டை கொத்து சப்பாத்தி

தேவையான பொருள்கள்

சப்பாத்தி - 5 முட்டை- 2 நறுக்கிய  வெங்காயம் - 2நறுக்கிய தக்காளி - 2நறுக்கிய  குடை மிளகாய் - 1இஞ்சி பூண்டு விழுது- 2 ஸ்பூன்  மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் நறுக்கிய   பச்சை மிளகாய் - 2 கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன் கொத்த மல்லி  கறிவேப்பிலை  -  சிறிதளவுஎண்ணெய்  - 4 ஸ்பூன்உப்பு - தேவைாயன அளவு

செய்முறை

சப்பாத்திகளை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்   வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம், பச்சை மிளகாய் வதங்கியதும் தக்காளி மற்றும் குடை மிளகாய் சேர்த்து வதக்கவும். குடை மிளகாய் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள்  , கரம் மசாலா தூள் உப்பு சேர்த்து வதக்கவும்.

நன்கு  வதங்கியவுடன் நறுக்கிய சப்பாத்திகளை சேர்த்து வதக்கவும். சப்பாத்தியுடன் மசாலா நன்கு சேர்ந்து வந்ததும் முட்டையை உடைத்து ஊற்றவும். முட்டை வெந்து கலவையுடன் ஒன்றாக ஆனதும்  நன்கு  கிளரி   இறக்கவும்.

More News >>