அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவால் விமான சேவைகள் பாதிப்பு (வீடியோ)

அமெரிக்கா: மின்னசோட்டா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக பாதுகாப்பை கருத்தில் கொண்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வடக்கு பகுதியில் உள்ள மின்னசோட்டா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், மின்னசோட்டா மாகாணத்தின் தென் பகுதி நகரங்கள் பனியால் மூழ்கி உள்ளன. அதிகபட்சமாக 17 அங்குலமும், குறைந்தபட்சமாக 7 அங்குலத்திற்கும் பனி படர்ந்துள்ளது.

மேலும், பனிப்புயலாலும் அமெரிக்க மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் எதிரொலியாக, சாலை போக்குவரத்தும், வான்வழி போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.நேற்று தொடர்ந்து பனிப்பொழிவு இருந்துவந்ததால், டுவின் சிட்டீஸ் மற்றும் பார்தர் சவுத் பகுதிகளுக்கு இடையே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், விபத்துகளும் நிகழ்ந்தன.

இதனால், 70 சதவீத பேருந்துகள் 25 நிமிடங்களுக்கு மேல் தாமதமாக சென்றன. பல்வேறு பேருந்துகளின் சேவையும் ரத்து செய்யப்பட்டது.இதேபோல், தொடர்ந்து பனிப்பொழிவு இருந்து வந்ததால் சர்வதேச செயின்ட்.பவுல் விமான நிலையம் நேற்று மூடப்பட்டது. இதனால் நேற்று முழுவதும் சுமார் 400 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டது.

சாலைகளில் படர்ந்துள்ள பனியை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள ஒருவர்.. வீடியோ..

More News >>