ஒற்றை விரலைக் காட்டும் திமுக...முரண்டு பிடிக்கும் கட்சிகள்...!கூட்டணியில் குழப்பம்?

திமுக கூட்டணியில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒரு தொகுதி தான் ஒதுக்க முடியும் என்று ஒற்றை விரலைக் காட்டி கறார் காட்ட, அந்தக் கட்சிகளோ கூடுதல் தொகுதிகளைக் கேட்டு முரண்டு பிடிப்பதால் குழப்பம் நிலவுகிறது.

கூட்டணியில் காங்கிரசின் பங்காக 10 தொகுதிகளைப் பிரித்து கொடுத்துவிட்டது திமுக. தொடர்ந்து இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளுடன் பேச்சு நடத்திய நிலையில் முஸ்லீம் லீக் கட்சிக்கு மட்டும் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு விட்டது.

திமுக கூடுதல் தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது. அதே நேரம் தேமுதிகவும் கூட்டணிக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளதால் மற்ற கட்சிகளுக்கு ஒரு தொகுதி தான் என திமுக தரப்பில் கறார் காட்டப்படுகிறது. மதிமுகவோ 3 தொகுதிகளை எதிர்பார்க்கிறது. இரு கம்யூனிஸ்டுகளும் தலா இரு தொகுதிகளாவது வேண்டும் என்கிறது விடுதலைச் சிறுத்தைகளும் ரெண்டு என்று முரண்டு பிடிக்கிறது.

இதனால் கூட்டணி ஒப்பந்தம் இழுபறியாகிக் கொண்டே இருக்கிறது. ரெண்டாவது ரவுண்டாக இன்றும் மதிமுக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நீடிக்கிறது. ஒற்றைத் தொகுதியுடன் கட்சிகள் சமாதானமாகுமா? என்பது ஓரிரு நாளில் தெரிந்துவிடும் என்று கூறப்படுகிறது.

More News >>