ரஜினியின் பாராட்டால் உச்சி குளிர்ந்த விஜயபிரபாகரன் - வைரலாகும் நன்றி டி வீட்!
தமது அரசியல் பேச்சை ரஜினி பாராட்டிய தருணம் என் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்று விட்டேன் என்று கூறி விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் சந்தோஷமாக டிவீட் செய்த பதிவு வைர வாகி வருகிறது.
விஜயகாந்த் உடல் நலமில்லாமல் சிகிச்சைக்கு வெளிநாடு செல்ல , அவருடைய மகன் விஜயபிரபாகரன் அரசியல் பிரவேசம் செய்து தேமுதிக மேடைகளில் அசத்தி வருகிறார். தொண்டர்களும் நடை, பாவனை, பேச்சில் அச்சு அசலாக விஜயகாந்த் போலவே இருக்கிறார் என்று விஜய பிரபாகரனை கொண்டாடி வருகின்றனர்.
நேற்று விஜயகாந்தை நலம் விசாரிக்க வீட்டுக்கு நடிகர் ரஜினிகாந்த் வந்த போது விஜய பிரபாகரனும் இருந்தார். அவரின் தோளில் தொட்டு உன் மேடைப் பேச்சு நன்றாக இருக்கிறது.. மகிழ்ச்சி என்று ரஜினி வாழ்த்தியுள்ளார்.
இதைக் குறிப்பிட்டு விஜயபிரபாகரன், ரஜினி வாழ்த்திய தருணம் மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்று விட்டேன் என்றும், இன்னும் உறுதியாக, திறமையாக அரசியல் பணியாற்றுவேன் அங்கிள் என்று ரஜினிக்கு நன்றி தெரிவித்து படத்துடன் விஜயபிரபாகரன் டிவிட் செய்துள்ளது பரபரப்பாக வைரலாகி வருகிறது.