பெங்களூருவில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் திடீர் தீ விபத்து - பார்வையாளர் அலறி ஓட்டம்!
பெங்களூருவில் விமான சாகச நிகழ்ச்சியை பார்வையிட திரண்டிருந்த கூட்டம் அருகே திடீரென தீப்பிடித்ததில் ஏராளமான வாகனங்கள் தீயில் கருகின. பார்வையாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
பெங்களூரு அருகே யெலகங்கா விமானப் படைத் தளத்தில் 12-வது சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 20-ந் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெறும் விமான கண்காட்சியையொட்டி பல்வேறு போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளும் தினமும் நடைபெறுகிறது.
இன்றும் சாகச நிகழ்ச்சியைக் காண ஏராளமானோர் திரண்டிருந்தனர். பார்வையாளர் பகுதி அருகே வாகனங்கள் நிறுத்துமிடத்தில் 12.30 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. இதில் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் எரிந்தன. பார்வையாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். கடும் போராட்டத்திற்குப் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
இதே இடத்தில் கடந்த 19-ந் தேதி விமான சாகச ஒத்திகையின் போது இந்தியாவின் இரண்டு சூர்ய கிரண் போர் விமானங்கள் நடுவானில் மோதி தீப்பிடித்க சிதறியதில் போர் விமானி ஒருவர் உயிரிழந்த சோகமும் நடந்தது குறிப்பிடத்தக்கது.