பெங்களூருவில் வானில் சாகசம் நிகழ்த்திய சூர்ய கிரண் போர் விமானங்கள்!
பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சி கடந்த 20-ந் தேதி முதல் நடந்து வருகிறது. இதில் விமான சாகச நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. கடந்த 19-ந் தேதியன்று நடந்த சாகச ஒத்திகையின் போது இரு சூர்ய கிரண் போர் விமானங்கள் நடுவானில் மோதி தீப்பிடித்ததில் விமானி சஹீல் காந்தி உயிரிழந்தார். மேலும் இரு விமானிகள் காயமடைந்தனர்.
இதனால் கடந்த நான்கு நாட்களாக சூர்ய கிரண்போர் விமானங்கள் சாகசத்தில் ஈடுபடுத்தப்படவில்லை.இன்று காலை 7 சூர்ய கிரண் விமானங்கள் விண்ணில் சீறிப் பாய்ந்து வானில் சாகசத்தில் ஈடுபட்டன. சுமார் 15 நிமிடங்கள் சூர்ய கிரண் விமானங்கள் வானில் சாகசம் நிகழ்த்தியதை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
விமான சாகசத்திலேயே 9 சூர்ய கிரண் விமானங்களின் சாகசம் தnன் மிகவும் ஆபத்தான ஒன்று. ஒத்திகையின் போது இரு விமானங்கள் தீப்பிடித்து உருக்குலைந்ததால் இன்றைய சாகசத்தில் 7 விமானங்கள் மட்டுமே பங்கேற்றன.
இதே போன்று இந்திய விமானப்படையின் இலகுரக விமானமான தேஜஸ் விமானத்தில் இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்து வானில் பறந்து அசத்தினார்.