முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் தமிழிசை சந்திப்பு - கூட்டணியில் தேமுதிக நிலை குறித்து அவசர ஆலோசனை!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து கூட்டணியில் தேமுதிக நிலை குறித்து அவசர ஆலோசனை நடத்தினார்.

அதிமுக கூட்டணியில் தேமுதிக சேருமா? இல்லையா? என்ற இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. பாமகவை விட கூடுதல் தொகுதி கேட்ட விஜயகாந்த், தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்புக்குப் பின் திமுக கூட்டணியில் இணைவாரா? என்ற பரபரப்பு நிலவுகிறது. அதிமுக கூட்டணியில் விஜயகாந்தை கொண்டு வந்து விட வேண்டும் என்ற தீவிர முனைப்பில் பாஜக ஆரம்பம் முதலே ஆர்வம் காட்டி வருகிறது.

இதனால் விஜயகாந்தை சரிக்கட்டுவது குறித்து நேற்று மதுரை வந்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்துடன் இரண்டு முறை ஆலோசனை நடத்தினார்.

இன்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனும் சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவருடைய இல்லத்தில் சந்தித்து அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். கூட்டணியில் தேமுதிக நிலை குறித்தும், பாஜகவுக்கு ஒதுக்கப்படவுள்ள 5 தொகுதிகள் எவை என்பது குறித்தும் தமிழிசை விவாதித்ததாக தெரிகிறது.

More News >>