டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தொடர் உண்ணாவிரதம் அறிவிப்பு!
டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி வரும் மார்ச் 1-ந் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அம்மாநில முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லி இன்னும் யூனியன் பிரதேசமாக இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இருந்தாலும் அதிகாரங்கள் அனைத்தும் துணை நிலை ஆளுநருக்கே உள்ளது. இதனால் அங்கு ஆளுநருக்கும், முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் இடையே அடிக்கடி மோதல் என்பது சகஜமாகி விட்டது.
இதனால் கூடுதல் அதிகாரம் வேண்டும், மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் மார்ச் 1-ந் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.