எங்கள் 7 பேரை விடுதலை செய்ய உதவுங்கள் - முதல்வருக்கு நளினி கண்ணீர் கடிதம்!

எங்களை விடுதலை செய்ய உதவுங்கள் என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் நளினி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

1991-ல் ராஜீவ் காந்தி கொலை கொல்லப்பட்ட வழக்கில் நளினி, முருகன், பேரரிவாளன் உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

25 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வரும் இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கை விடுக்கப் பட்டு வருகிறது. தமிழக அமைச்சரவையும் விடுதலை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியும் விடுதலை செய்யப்படவில்லை.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நளினி, தங்களை விடுதலை செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவிலேயே ஆயுள் தண்டனை பெற்று அதிக ஆண்டுகள் சிறையில் இருப்பது தாங்கள் தான் என்றும் ஒவ்வொரு நாளும் விடுதலையை எதிர்பார்த்து ஏமாற்றம் தான் மிஞ்சி கண்ணீர் சிந்துவதாகவும் நளினி தெரிவித்துள்ளார்.

மேலும் தங்கள் விடுதலைக்காக தமிழக அரசு இயற்றிய தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளதாகக் கூறியுள்ள நளினி, தங்கள் விடுதலைக்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் நளினி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

More News >>