கார் விபத்தில் சிக்கிய கள்ளக்குறிச்சி அதிமுக எம்.பி காமராஜ் - காயங்களுடன் உயிர் தப்பினார்!
சேலம் அருகே கார் டயர் வெடித்து தலைகுப்புற கவிழ்ந்ததில் கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்.பி காமராஜ் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அருகே மின்னாம் பள்ளியில் நடக்கவுள்ள அரசு விழாவிற்காக கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்.பி காமராஜ் காரில் சென்று கொண்டிருந்தார். திடீரென காரின் டயர் வெடித்து தலைகுப்புறக் கவிழ்ந்தது. இதில் காமராஜ் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
நேற்று அதிகாலை விழுப்புரம் தொகுதி அதிமுக எம்.பி ராஜேந்திரன் கார் விபத்தில் உயிரிழந்த சோகம் மறைவதற்குள் மற்றொரு அதிமுக எம்.பி விபத்தில் சிக்கி காயமடைந்தது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.