ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் விழா - அதிமுகவினர் உற்சாக கொண்டாட்டம்!

ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

அதிமுக தலைமைக் கழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ .பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து ஜெயலலிதா சிலைக்கு பிரமாண்டமாலை அணிவித்தனர். பின்னர் 71 கிலோ கேக் வெட்டி ஓபிஎஸ்சும் இபிஎஸ்சும் மாறி மாறி ஊட்டினர். தொடர்ந்து ஜெய லாதாவின் ஆட்சிக் காலத்தில் செய்த சாதனைகளைத் தொகுத்து மலர் வெளியிடப்பட்டது.

அதிமுக தலைமைக் கழகம் சார்பில் கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனனுக்கு புதிய கார் ஒன்றும் வழங்கப்பட்டது.

ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளைக் குறிப்பிடும் வகையில் தமிழகம் முழுவதும் 192 கோடி ௹பாய் செலவில் 71 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை, மெரினா கடற்கரைச் சாலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தனர்.

ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுகவினர் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் என வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.

More News >>