ம்ம்ம்.. சுவையான லெமன் சிக்கன் ரெசிபி

ஹலோ ருச்சி கார்னர் வியூவர்ஸ்.. இன்னைக்கு நாம் சுவையான லெமன் சிக்கன் எப்படி செய்றதுன்னு பார்க்கப்போறோம்..

தேவையான பொருட்கள்:சிக்கன் - 300 கிராம்

பெரிய வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 3

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

மிளகு தூள் - 1 தேக்கரண்டி

எலுமிச்சைப்பழம் - 1

லவங்கம் - 3

பட்டை - சிறய துண்டு

எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி

கறிவேப்பிலை, கொத்தமல்லி

தயிர் - 3 தேக்கரண்டி

உப்பு

செய்முறை:

முதலில், எலும்பு இல்லா சிக்கன் துண்டுகளை, 3 தேக்கரண்டி தயிருடன் உப்பு சேர்த்து 30 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பில்லை, பிரிஞ்சி இலை, லவங்கம், பட்டை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.பிறகு நறுக்கிய வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும், ஊறவைத்த சிக்கன் கலவை சேர்க்கவும்.

சிறு தீயில், சிக்கனை நன்றாக கிளறி வேக விடவும். அரை வேக்காட்டில், எலுமிச்சப்பழச்சாறை பிழிந்து மீண்டும் வேகவிடவும்.

இறுதியாக மிளகுத் தூள் சேர்த்து கிளறி, பிறகு கொத்தமல்லித் தூவி இறக்கவும்.

அவ்ளோதாங்க.. சுவையான லெமன் சிக்கன் ரெடி..!

More News >>