கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி - துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதபூஜை செய்தார்!
கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி, அங்கு துப்புரவுப் பணிகளில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு பாதபூஜை செய்து மரியாதை செய்தார்.
உ.பி.மாநிலம் பிரக்யாராஜில் பிரசித்தி பெற்ற கும்பமேளா நடைபெற்று வருகிறது. இதில் தினமும் லட்சக்கணக்கானோர் புனித நீராடி வருகின்றனர். இன்று பிரதமர் மோடி கும்பமேளாவில் புனித நீராடினார்.
பின்னர் கும்பமேளாவில் துப்புரப் பணியில் ஈ.டுபட்டு சுற்றுப்புறப் பகுதிகளை சுத்தப்படுத்தி வரும் பணியாளர்களின் கால்களை கழுவி பூஜை செய்து மரியாதை செலுத்தினார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி பிரக்யாராஜில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.