வெயிலுக்கு இதமா சில்லுனு குடிக்கலாம் கோல்ட் காபி
வெயிலுக்கு இதமா சில்லுனு குடிக்கும் கோல்டு காபி வீட்டுலயே எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
குளிர்ந்த பால் 250 மி.லி
சாக்லேட் சிரப் - 2 மேசைக் கரண்டி
சர்க்கரை - 2 மேசைக்கரண்டி
காபி பவுடர் - 1 மேசைக் கரண்டி
செய்முறை:முதலில், காபி பவுடரை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கலக்கி வைக்கவும்.பிறகு, பிரிட்ஜில் குளிர வைத்த பாலை ஒரு ஜாரில் ஊற்றவும்.
இத்துடன், காபி பவுடர் கலவை, சாக்லேட் சிரப், சர்க்கரை சேர்த்து மிக்சியில் ஒரு ஓட்டு ஓட்டி எடுத்தால், கோல்டு காபி ரெடி..!