நம்ம ஊர் தேன் மிட்டாய் செய்யலாமா ?

அனைவருக்கும் பிடித்த ருசியான நம்ம ஊர் தேன் மிட்டாய் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

அரிசி - ஒரு கப்

உளுத்தம் பருப்பு - கால் கப்

சர்க்கரை - ஒன்றரை கப்

கேசரி பவுடர்

உப்பு

செய்முறை:

அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை ஒன்றாக சேர்த்து தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைத்து பின்னர் அரைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து சர்க்கரை பாகு எடுக்கவும்.

பின்னர், அரைத்து வைத்த மாவை ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அத்துடன் கேசரி பவுடர், சிறிது உப்பு சேர்த்து நன்றாக கிளறி வடை மாவு பதத்திற்கு தயார் செய்யவும்.

மற்றொரு, வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து அதில் போட்டு பொறித்து எடுக்கவும்.

இந்த உருண்டைகளை சர்க்கரை பாகில் போட்டு 10 - 15 நிமிடங்கள் ஊற வைத்து எடுத்தால் ருசியான நம்ம ஊர் தேன் மிட்டாய் ரெடி ..!

More News >>