புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் - கறுப்புப் பட்டை அணிந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்!
புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி வீரர்கள் கையில் கறுப்புப் பட்டை அணிந்து விளையாடினர்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதலாவது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. ஆட்டம் தொடங்கும் முன் இரு நாட்டு தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது.
பின்னர் காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த 14 - ந் தேதி பாக்.ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான இந்திய ரிசர்வ் படை வீரர்களுக்கு இரு அணி வீரர்களும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்திய அணி வீரர்கள் கையில் கறுப்புப் பட்டை அணிந்து விளையாடினர்.