வாழ்த்துச் சொன்ன ரஜினி .....!நன்றி தெரிவித்த கமல்.....!
மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்து ஓராண்டு நிறைவு செய்த அக்கட்சித் தலைவர் கமலஹாசனுக்கு நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் வாழ்த்து தெரிவிக்க, பதிலுக்கு நன்றி நண்பரே என்று கமலும் பதிலளித்துள்ளார்.
நடிகர் கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்து வரும் மக்களவைத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட தயாராகி விட்டார். தேர்தலில் தானும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்து ஓராண்டு நிறைவு விழாவை தன் கட்சி அலுவலகத்தில் கொடியேற்றி கொண்டாடினார் கமல்.
கட்சி ஆரம்பித்து 2-ம் ஆண்டில் அடியெடுத்த கமலஹாசனுக்கு நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.2-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்து தேர்தலிலும் முதல் முறையாக போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் என் நண்பருமான கமலஹாசன், பொது வாழ்விலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என ரஜினிகாந்த் வாழ்த்தியுள்ளார்.
பதிலுக்கு கமலும் டிவிட்டரில், நன்றி என் 40 ஆண்டு கால நண்பரே... நல்லவர் துணை நின்றால் நாற்பது எளிதே ... நாளை நமதே .... என்று ரஜினியையும் நாசூக்காக துணைக்கு அழைத்துள்ளார் கமல்.