தமிழக தொழிலதிபர் முருகானந்தம் குறித்த குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது
தமிழக தொழிலதிபர் முருகானந்தம் குறித்த குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 91-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இதில் கோவையைச் சேர்ந்த மலிவு விலை நாப்கின் உற்பத்தியாளரான தொழிலதிபர் முருகானந்தம் குறித்த குறும்படத்துக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பெண்கள் மாதவிடாய் காலத்தில் படும் அவதிகளை விவரிக்கும் ‘பீரியட்- எண்ட் ஆஃப் சென்டன்ஸ்’ குறும்படத்துக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.