ருசியான கத்திரிக்காய் சட்னி ரெசிபி

இட்லி, தோசைக்கு ருசியான சைடு டிஷ் கத்திரிக்காய் சட்னி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் - 10தக்காளி - 2.கத்திரிக்காய் - 2உருளைக்கிழங்கு - 1பூண்டு - 3இஞ்சி பூண்டு விழுது - சிறிது எலுமிச்சைப்பழ சாறு - 2 ஸ்பூன் பச்சை மிளகாய் - 2எண்ணெய் உப்பு

செய்முறை:

முதலில், கடாயில் எண்ணெய் விட்டு அதில் நீளமாக அறிந்த பச்சை மிளகாய் சேர்க்கவும்.

இதனுடன் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

தக்காளி விழுது, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, இதனுடன் வேக வைத்த கத்திரிக்காய், மசித்த உருளை தேவைக்கு உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து 2 நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

அவ்ளோதாங்க சுவையான கத்தரிக்காய் சட்னி ரெடி..!

More News >>