இது புது பிசினஸ் - 50 வருஷத்துக்கு விமான நிலைய பராமரிப்பில் கோலோச்ச போகும் அதானி குழுமம்!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விமான நிலைய நிர்வாக பொறுப்பை தனியாரிடம் ஒப்படைப்பதென்று முடிவெடுக்கப்பட்டது. உலகத்தரமான சேவைகளை வழங்கும் வகையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பின் அடிப்படையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தற்போது இதனை செயல்படுத்தும் வேலைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக அகமதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ, திருவனந்தபுரம், மங்களூரு ஆகிய 5 விமான நிலையங்களின் நிர்வாகம், பராமரிப்பு பணிகளுக்கான டெண்டர் கோரப்பட்டிருந்தது. இந்த டெண்டரில் மொத்தம் 10 நிறுவனங்கள் போட்டிபோட்டன. கடைசியில் அதானியின் நிறுவனம் இந்த ஐந்து விமான நிலையங்களையும் மிக அதிக தொகைக்கு ஒப்பந்தம் கோரி திட்டத்தை கையப்படுத்தியுள்ளது.

இதன்மூலம் இனி இந்த ஐந்து விமான நிலையங்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு பணிகள் அதானி நிறுவனம் வசமே செல்ல இருக்கிறது. அதுவும் ஒன்று இரண்டு ஆண்டுகளுக்கு அல்ல. மொத்தம் 50 ஆண்டுகள். ஆம் அடுத்த 50 ஆண்டுகளுக்கு லக்னோ, மங்களூர், ஜெய்ப்பூர், திருவனந்தபுரம், அகமதாபாத் ஆகிய 5 விமான நிலையங்களின் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை அதானி நிறுவனமே மேற்கொள்கிறது. ஏற்கனவே இந்த தனியார் துறைமுகம் உள்ளிட்ட அரசுத்துறைகளில் பணிகளை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.

More News >>