ஐந்து காமிராக்களுடன் மார்ச் மாதம் வருகிறது நோக்கியா 9 ப்யூர்வியூ

ஸ்பெயின் நாட்டின் பார்ஸிலோனா நகரில் பிப்ரவரி 25 முதல் 28ம் தேதி வரைக்கும் உலக மொபைல்போன் மாநாடு (Mobile World Congress 2019) நடைபெறுகிறது. இதில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய போன்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.

நோக்கியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள நோக்கியா 9 ப்யூர்வியூ ஸ்மார்ட்போன், இதுவரை எந்த போனிலும் இல்லாதபடி பின்பக்கம் ஐந்து காமிராக்களை கொண்டுள்ளது. இதில் மூன்று காமிராக்கள், மோனோகுரோம் வகை லென்ஸ்களையும் இரண்டு காமிராக்கள் ஆர்ஜிபி வகை காமிராக்களையும் கொண்டிருக்கும். இந்த ஐந்து காமிராக்களின் பதிவுகளும் இணைந்து ஒரே படத்தை அளிக்கும். ஐந்து காமிராக்களும் 12 எம்பி ஆற்றல் கொண்டவை. செல்ஃபி என்னும் தற்பட பிரியர்களுக்காக முன்பக்கம் 20 எம்பி ஆற்றலுடன் கூடிய காமிரா இருக்கும்.

ஸ்நாப்டிராகன் 845 சிப் ஆன் சிஸ்டம் பிராசஸருடன் 6 ஜிபி இயக்கவேகம் கொண்டதாக நோக்கியா 9 ப்யூர்வியூ மார்ச் மாதம் சந்தைக்கு வர உள்ளது. இதன் சேமிப்பளவு 128 ஜிபியாக இருக்கும். ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்ட இதன் விலை 699 டாலராக (ஏறக்குறைய ரூ.49,700) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5.99 அங்குல குவாட்ஹெச்டி வகை தொடுதிரை 1440X2960 பிக்ஸல் தரம் கொண்டதாக இருக்கும். பேட்டரி 3320 mAh ஆற்றல் கொண்டிருக்கும். வைஃபை 5, ப்ளுடூத் 5.0, டைப் சி போர்ட் ஆகியவையும் நோக்கியா 9 ப்யூர்வியூ போனில் அமைந்திருக்கும்.

More News >>