டாஸ்மாக் சரக்கு வாங்க ஆதார் கார்டை ஏன் கட்டாயமாக்கக் கூடாது? உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் சரமாரி கேள்வி!

டாஸ்மாக் கடைகளில் சரக்கு வாங்குவதற்கு ஆதார் கார்டை ஏன் கட்டாயமாக்கக் கூடாது? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.

டாஸ்மாக் கடைகள் குறித்த வழக்கு விசாரணைகளில் நீதிபதி கிருபாகரன் அதிரடி உத்தரவுகளையும், யோசனைகளையும் தெரிவித்து வருகிறார்.

கடந்த மாதம் டாஸ்மாக் தொடர்பான ஒரு வழக்கில் திடீரென காந்தி நினைவு தினமான ஜனவரி 30-ந் தேதிக்கு டாஸ்மாக் கடைகளை அடைக்க உத்தரவு பிறப்பித்தார்.

நேற்று நடந்த ஒரு வழக்கில் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடுவது எப்போது? என்று கேள்வி கேட்டதுடன் பல்வேறு புள்ளி விபரங்களுடன் டாஸ்மாக் தலைவர் ஆஜராக வேண்டும் என்றார் நீதிபதி கிருபாகரன்.

இன்று நடந்த வழக்கு விசாரணையில், எல்லாவற்றுக்கும் ஆதாரை காட்டச் சொல்லும் போது, டாஸ்மாக் கடைகளில் சரக்கு வாங்குவதற்கும் ஆதாரை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதி கிருபாகரன், டாஸ்மாக் கடைகளின் நேரத்தை குறைக்கலாமே? என்றும் யோசனை கூறினார்.

More News >>