தேமுதிக கூட்டணி விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் யூ டர்ன்!

தேமுதிகவுடனான கூட்டணி குறித்து வந்தா என்ன? வராவிட்டால் என்ன? என்று நேற்று கிண்டலடித்த அமைச்சர் ஜெயக்குமார் இன்று யூ டர்ன் அடித்து தேமுதிகவுடன் பேசி வருகிறோம் என்று அடக்கி வாசித்துள்ளார்.

அதிமுகவுடனான கூட்டணியில் இணைய தேமுதிக ஏகப்பட்ட நிபந்தனைகள், கூடுதல் சீட் என முரண்டு பிடித்து வருகிறது. ஒரு பக்கம் திமுகவுடனும் கூட்டணிப் பேச்சு நடப்பதாக தகவல்கள் வர தேமுதிக மீது அதிமுக அமைச்சர்கள் விமர்சனம் செய்ய ஆரம்பித்தனர்.

அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளரான அமைச்சர் ஜெயக்குமார் நேற்று கூறுகையில், கூட்டணிக்கு தேமுதிக வந்தால் சந்தோஷம், வராவிட்டாலும் கவலை இல்லை என எகத்தாளமாக கூறியிருந்தார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ, மிரட்டும் தொனியில் விமர்சித்திருந்தார்.

ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி யோ, தேமுதிகவினருடன் கூட்டணிப் பேச்சு தொடர்வதாக திரும்பத் திரும்பக் கூற அமைச்சர் ஜெயக்குமாரும் தன் பேச்சிலிருந்து திடீரென பின்வாங்கி விட்டார். இன்று அடக்கமாக தேமுதிகவுடன் கூட்டணிப் பேச்சு தொடர்கிறது என்றவர், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது அவரது சொந்தக் கருத்து என்றும் கூறி 'யூ டர்ன்' அடித்துள்ளார்.

More News >>