சுவையான முட்டை பணியாரம் ரெசிபி

அனைவருக்கும் பிடித்த முட்டை பணியாரம் எப்படி செய்றதுனு பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்

முட்டை - 7

நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்

நறுக்கிய பச்சைமிளகாய் - 2

மிளகுத்தூள் - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு பௌலில் உடைகளை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றவும்.

அத்துடன் பச்சைமிளகாய், வெங்காயம் உப்பு சேர்த்து நன்றாக அடிக்கவும்.

பிறகு, தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றவும். என்னை காய்ந்ததும் அடித்து வைத்த முட்டை கலவையை ஒவ்வொரு குழியிலும் ஊற்றி நிரப்பவும்.

முட்டை பாதி வெந்ததும் அதன்மீது மிளகுத் தூளை தூவவும். பின்னர் முட்டையை திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

அவ்ளோதாங்க ருசியான முட்டை பணியாரம் ரெடி..!

More News >>