ப்ரைட் ரைஸ்க்கு பக்கா சைடிஸ் கோபி மஞ்சூரியன்

ப்ரைட் ரைஸ்க்கு சரியான சைட் டிஷ்னா அது கோபி மஞ்சூரியன் தான்.. கோபி மஞ்சூரியன் இப்ப எப்படி செய்றதுனு பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

சோள மாவு - கால் கப்

மைதா மாவு - அரை கப்

காளிபிளவர் - ஒரு கப்

மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்

சில்லி சாஸ் - ஒரு டீஸ்பூன்

இஞ்சி - ஒரு டேபிள்ஸ்பூன்

பூண்டு - ஒரு டேபிள்ஸ்பூன்

வெங்காயம் - 1

குடை மிளகாய் - பாதி

சில்லி சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்

தக்காளி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்

சோயா சாஸ் ஒரு டேபிள்ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு தேவையான அளவு

செய்முறை:

ஒரு பவுலில் சோள மாவு, மைதா மாவு, உப்பு, மிளகுத்தூள், சில்லி சாஸ், சிறிதளவு தண்ணீர் சேர்த்து மாவு பதத்திற்கு தயார் செய்யவும்.

இந்த மாவை காலிஃப்ளவருடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.

பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும், காலிஃப்ளவர் சேர்த்து பொரித்து எடுக்கவும்.

பின்னர், மற்றொரு வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நறுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.

அத்துடன், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறியதும் குடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, சில்லி சாஸ், தக்காளி சாஸ், சோயா சாஸ், மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி வேக வைக்கவும்.

மசாலா கிரேவி தயாரானதும் காலிஃப்ளவரை சேர்த்து நன்றாக கிளறி அதன்மீது ஸ்ப்ரிங் ஆனியன் தூவி இறக்கினால் சுவையான கோபி மஞ்சூரியன் ரெடி..!

More News >>