விஜயகாந்த் மைத்துனர் சுதீஷூம், ஸ்டாலின் மருமகன் சபரீசனும் முடிவு செய்த திமுக- தேமுதிக கூட்டணி!

திமுக கூட்டணியில் தேமுதிக சேருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.இதற்கு அச்சாரம் போட்டு பேச்சு வார்த்தையை கனகச்சிதமாக முடித்தவர்கள் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் மற்றும் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ஆகியோர் தான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுகவுடனான கூட்டணியில் சேர சீட் பேரத்தில் தேமுதிக முரண்டு பிடிக்கிறது என்ற தகவல் வெளியான நிமிடம் முதலே திமுக தரப்பில் காய் நகர்த்தல் தொடங்கி விட்டது. இதனாலேயே திருநாவுக்கரசர், ரஜினி ஆகியோர் விஜயகாந்தை சந்தித்து உடல் நலம் விசாரித்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் சந்திப்பை மேற்கொண்டார்.

விஜயகாந்திடம் உடல்நலம் பற்றி விசாரித்ததுடன், அரசியல் பேச்சும் நடந்துள்ளது. அதில் தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாட்டை தெரிந்து கொண்ட, மு.க.ஸ்டாலின் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த தனது மனசாட்சியாக கருதும் மருமகன் சபரீசனுக்கு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நேற்று இரவில் சுதீஷூம், சபரீசனும் சந்திப்பு நடத்தி விறுவிறுவென கூட்டணியை முடிவு செய்து விட்டனராம். கூட்டணி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வெளியாகலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது.

More News >>