இந்திய விமானப்படையின் அதிரடி தாக்குதல் - ரகசியம் காத்த அந்த 7 பேர் யார் தெரியுமா?
பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய விமானப் படை நடத்திய அதிரடி தாக்குதல் ஒரு வாரம் முன்பே திட்டமிடப்பட்டது என்றும், அந்த ரகசியம் 7 பேருக்கு மட்டுமே முன்கூட்டி தெரிந்த ரகசியம் என்றும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
புல்வாமா தாக்குதல் நடந்த 14-ந் தேதியே தீவிரவாதிகளை பழி தீர்க்க உறுதி பூண்டது மத்திய அரசு. முப்படைகளுக்கும், உளவு அமைப்புகளுக்கும் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார் பிரதமர் மோடி.
வெளிநாட்டு உளவுப் பணிகளை மேற்கொள்ளும் ரா உளவு அமைப்பு . பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத இயக்கங்களின் முகாம்கள் பற்றிய தகவல்களை சேகரிக்க ஆரம்பித்தது. கடைசியில் கைபர் பக்துன்வா பகுதியில் பாலகோட்டில் செயல்படும் பழமையான தீவிரவாத முகாமை தேர்வு செய்து கொடுத்தது ரா உளவு அமைப்பு .
கடந்த 19-ந் தேதியே தாக்குதலுக்கான அமைதியை முப்படைகளுக்கும் பிரதமர் மோடி வழங்கி விட்டாராம். தாக்குதலுக்கான தக்க தருணத்திற்காக காத்திருந்தன இந்தியப் படைகள் . ஒரு வாரமாக இந்திய போர் விமானங்களும் எல்லைப் பகுதியில் தாறுமாறாக போக்குக் காட்டிப் பறந்து பாகிஸ்தான் படைகளை குழப்பவும் செய்தது.
25-ந் தேதி பாலகோட் முகாமில் 350-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளும், ஜெய்ஸ் இ முகமது அமைப்பின் முக்கிய தலைகள் பலரும் கூடியுள்ளதை மோப்பம் பிடித்த ரா, தாக்குதலுக்கு இதுதான் தக்க தருணம் என்று தகவலை தட்டி விட்டுள்ளது.
முப்படைத் தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி தாக்குதலை தொடங்கலாம் என்று கூறிவிட்டு இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்தாராம்.
அதிகாலையில் குவாலியரிலிருந்து ஒரு டஜன் மிக் 2000 ரக ஜெட் போர் விமானங்கள் சீறிப் பாய்ந்தன. பாதுகாப்புக்கு பல்வேறு படைத்தளங்களில் இருந்து சுகாய் ரக விமானங்களும் சீறிப் பாய்ந்தன.
அதிகாலை 3.40 மணிக்கு பாலகோட் முகாம் மீது மிக் ஜெட் விமானங்கள்குண்டு மழை பொழிந்து துல்லிய தாக்குதலை தொடுத்து கூண்டோடு அழித்தது. இதில் 325-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளும், முக்கியத் தலைகளும் தூக்கத்திலேயே சமாதியடைந்தனர்.
விமானத் தாக்குதல் திட்டம் குறித்த ரகசியம் கடைசி வரை 7 பேருக்கு மட்டுமே தெரியுமாம். பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், முப்படைகளின் தளபதிகள், ரா மற்றும் ஐ.பி உளவு அமைப்புகளின் தலைவர்கள் என அந்த 7 பேர் மட்டுமே அந்த ரகசியம் காத்தவர்கள். வெளியுறவு அமைச்சர் சுஷ்மா, ராணுவ அமைச்சர் நிர்மலா ஆகியோருக்குக் கூட தாக்குதல் நடந்து முடிந்த பின் தான் தகவல் தெரிவிக்கப்பட்டதாம்.