மு.க.அழகிரி எதார்த்தமானவர்....ஸ்டாலினோ கனவுலகில் இருக்கிறார்..!அமைச்சர் ஜெயக்குமார் வர்ணனை!
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி தோற்கும் என்று மு.க.அழகிரி கூறி, எதார்த்த நிலையை பிரதிபலித்துள்ளார். ஆனால் மு.க.ஸ்டாலினோ கனவுலகில் இருக்கிறார் என்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் வர்ணித்துள்ளார்.
அதிமுகவிலும், திமுக விலும் இன்னும் கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தை இழுத்துக் கொண்டே செல்கிறது. தேமுதிக மதில் மேல் பூனையாக எந்தப் பக்கம் சாயும் என்று இரு கூட்டணியுமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தேமுதிகவுடன் சுமூக பேச்சு நடந்து வருகிறது. திமுக கூட்டணியில் தேமுதிக சேரப்போகிறது என்பதெல்லாம் வெறும் தகவல் தானே தவிர உண்மையில்லை என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.
திமுக கூட்டணி தேர்தலில் தோற்கும் என்று மு.க.அழகிரி கூறி, எதார்த்தத்தை பிரதிபலித்துள்ளார்.மு.க.அழகிரி எதார்த்தமானவர். ஆனால் மு.க.ஸ்டாலினோ எப்போதும் கனவுலகில் இருக்கிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்தார்.