யாருக்கு ஆதரவு அல்லது தேர்தல் புறக்கணிப்பா? நடிகர் விஜய்-க்கு நெருக்கடி கொடுக்கும் ரசிகர் மன்ற நிர்வாகிகள்
லோக்சபா தேர்தலில் எந்த கூட்டணியை ஆதரிப்பது? அல்லது தேர்தலை புறக்கணிக்கிறோமா என்பதை தெளிவுபடுத்துமாறு நடிகர் விஜய்க்கு ரசிகர் மன்ற நிர்வாகிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றனராம்.
லோக்சபா தேர்தலில் தாம் போட்டியிடவில்லை... சட்டசபை தேர்தலில்தான் போட்டி என அறிவித்துவிட்டார் நடிகர் ரஜினிகாந்த். பெங்களூருவில் தாம் போட்டியிடப் போவதாக நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவித்து பிரசாரத்தையும் தொடங்கிவிட்டார்.
இந்த நிலையில் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படும் நடிகர் விஜய் என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறார் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் ரஜினிகாந்த் பாணியில் நமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியாக வேண்டும்.
ஏதேனும் ஒரு கூட்டணிக்கு ஆதரவு அல்லது தேர்தலை புறக்கணிக்கிறோம் என்பது போல வெளிப்படையாக முடிவை அறிவித்தாக வேண்டும் என நெருக்கடி கொடுத்து வருகின்றனராம் ரசிகர் மன்ற நிர்வாகிகள்.
எழில் பிரதீபன்