2 இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம்- 2 விமானிகள் கைது- பாக். அறிவிப்பு
இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் தொடர்ந்து உச்சகட்ட நிலையில் இருந்து வருகிறது. தற்போது 2 இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும் 2 விமானப்படை வீரர்களை கைது செய்ததாகவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் பலியாகினர். இதையடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் இந்திய விமானப் படைகள் தாக்குதல் நடத்தின.
இத்தாக்குதல் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகின்றன. இந்நிலையில் இன்று இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிப் கஃபூர், பாகிஸ்தான் வான்பரப்பில் அத்துமீறி பறந்த 2 இந்திய விமானப் படை விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதில் ஒன்று ஆசாத் ஜம்மு காஷ்மீர் பகுதியில் விழுந்து நொறுங்கியது. மற்றொரு இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் விழுந்தது.
மேலும் 2 விமானிகளையும் கைது செய்துள்ளோம் என்றார்.